போக்குவரத்து தொழிலாளர்களின் போனஸ் மற்றும் கருணை தொகைக்காக தமிழக அரசு 665 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், போக்குவரத்து ஊழியர்களுக்கான போனஸ் மற்றும் கருணை தொகை மற்றும் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்காக மொத்தம் 665 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த ஆண்டுகளில் போக்குவரத்து ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
முந்தைய பேச்சுவார்த்தையின் போது ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் பண பலன்கள் நவம்பர் வரை நிலுவை தொகை வழங்கப்பட்டது என்றும், தற்போது கடந்தாண்டு டிசம்பர் மற்றும் இந்தாண்டு ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய 4 மாதங்களுக்காக 251 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிதி பற்றாக்குறை காரணமாக 13-வது ஊதிய உயர்வு வழங்க முடியாதநிலை இருப்பதாகவும் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் தெரிவித்தார்.
Discussion about this post