மதுரையில் ஐந்து லட்சம் ரூபாய்க்கு 5 தூண்,4 கம்பி,கொஞ்சம் தகர சீட்டு பயணிகள் நிழற்குடை! எம்பி சு.வெங்கடேசன் பணம் கையாடலா?

மதுரை எம்.பி. வெங்கடேசன், தனது தொகுதி நிதியில் இருந்து கையாடல் செய்ததாக புது பூதம் கிளம்பியிருக்கிறது… மதுரையில் பயணிகள் நிழற்குடை அமைக்க அதிக நிதி செலவிட்ட சர்ச்சையில் சிக்கியது குறித்து பார்ப்போம்…

5 தூண், 4 கம்பி, கொஞ்சம் தகர சீட்டு… இந்த பயணிகள் நிழற்குடை அமைக்க செலவு 5 லட்சமாம்… அப்படித்தான் நிழற்குடை பக்கத்துல உள்ள கல்வெட்டுலயும் போட்டுருக்காங்க…

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை பக்கத்துல உள்ள பேருந்து நிறுத்தத்துல, கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசனோட உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதியில இருந்து 5 லட்சம் ரூபாய் செலவுல இந்த ஹைடெக்கான பயணிகள் நிழற்குடைய அமைச்சிருக்காங்களாம். இந்த நிழற்குடைக்கா 5 லட்சம் ரூபாய்? இதெல்லாம் ஓவர் மை சன்னுனு சர்ச்சை கிளம்புனதோட, அது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதலங்கள்ல வைரலாகிட்டு இருக்கு…

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரான சு.வெங்கடேசன் எம்.பி, மதுரையில எப்பவுமே தனி ஆவர்த்தனம் பண்ணிக்கிட்டு இருக்கிறதா சொந்தக் கட்சிக்காரங்களே கடுப்புல இருக்காங்க…

அதுமட்டுமில்லாம மக்கள் பிரச்சனைக்காக தான் மட்டுமே நாடாளுமன்றத்துல குரல் கொடுக்கிறதா, சமூக ஊடகங்கள்ல போட்டோ போட்டு வெளம்பரமும் பண்ணிக்கிட்டு இருக்குறது கூட்டணி கட்சிக்காரங்களையும் கொந்தளிக்க வச்சிக்கிட்டு இருக்குது….

இந்த நிலையிலதான், சு.வெங்கடேசன் எம்.பி, தன்னோட 2019-2020 உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதியில இருந்து 5 லட்சம் ரூபாய மதுரை மாநகராட்சிக்கு ஒதுக்குனதாவும், அதுலதான் இந்த பயணிகள் நிழற்குடைய அமைச்சிருக்கிறதாவும் கல்வெட்டுல பதிவு செஞ்சிருக்காங்க.

அதிக பட்சமா ஒரு லட்சம் ரூபாயில முடிக்கக்கூடிய வேலைக்கு 5 லட்சமா? மீதமுள்ள 4லட்சம் என்னாச்சு? வேள்பாரி எழுதுன வெங்கடேசன், கையாடல் பண்ணிக்கிட்டாரா? அல்லது மதுரை மாநகராட்சி கவுன்சிலர்களும், அதிகாரிகளும் பங்குபிரிச்சிக் கிட்டாங்களான்னு தொடர்ந்து சர்ச்சை கிளம்பிக்கிட்டு இருக்கு..

இப்படி பேருக்கு ஆசைப்பட்டு, அநியாயமா 5லட்சம் ரூபாய் இந்த ஒத்தப் பேருந்து நிறுத்தத்துக்கு எம்.பி செலவு பண்றதுக்கு பதிலா நாலு தெருவுக்கு விளக்காவது அமைச்சிருக்கலாமேன்னு நெட்டிசன்கள் கழுவிக் கழுவி ஊத்துறாங்க…

இப்படி சமூக ஊடகங்கள் எல்லாம் வெங்கடேசன் கையாடல் பண்ணிட்டாரான்னு கேள்வி எழுப்புனதும் முழி பிதுங்கிப் போய், அந்த பேருந்து நிறுத்தத்தை பார்க்குறமாதிரி போட்டோவ எடுத்துப் போட்டதோடு, அந்தப் பணியோட திட்ட மதிப்பீடு, வரைபடம் உள்ளிட்ட நிர்வாக விவரங்கள வழங்கணும்னு மாநகராட்சி ஆணையர்கிட்ட கேட்டிருக்கிறதாவும் சொல்லியிருக்காரு…

ஒரு வேலைக்கு நிதி ஒதுக்குறீங்கன்னா, அந்த வேலையோட திட்ட மதிப்பீடு, வரைபடம் இதெல்லாத்தையும் பார்க்காமத்தான் நிதி ஒதுக்குவாங்களா? அல்லது அரசு நிர்வாகத்துல நடக்குற எதுவுமே மக்கள் மன்றத்துல வராமலேயே போயிடும்னு இப்படி சப்பக்கட்டு கட்டுறீங்களா? திமுக கூட்டணியில இருக்கிறதால அதோட கலெக் ஷன், கரப்ஷன், கமிஷன் எல்லாம் உங்களுக்கும் ஒட்டிக்கிச்சா? இப்படி பெயர் பலகைக்கு காட்டுற ஆர்வத்த ஒழுங்கா மக்கள் பணியில கவனம் செலுத்துனா பேரும் புகழும் தானாவே வந்து சேருமே?

– மதுரை செய்தியாளர் மாரிக்கண்ணன் மற்றும் செஸா…

 

Exit mobile version