திருமணம் என்னும் சிவில் ஒப்பந்தத்தை எப்படி கிரிமினல் குற்றமாக கருத முடியும் என்று அதிமுக எம்பி. அன்வர் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
உடனடி முத்தலாக் மசோதா மீது மக்களவையில் விவாதம் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் பங்கேற்று பேசிய அன்வர்ராஜா, உடனடி முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் முஸ்லிம் கணவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க கூடாது என வலியுறுத்தினார்.
திருமணம் என்னும் சிவில் ஒப்பந்தத்தை எப்படி கிரிமினல் குற்றமாக கருத முடியும் என கேள்வி எழுப்பிய அன்வர் ராஜா, உடனடி முத்தலாக் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்ட நிலையில் ஏன் தண்டனை வழங்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
இஸ்லாமியர்கள் மத்தியில் விவாகரத்து என்பது மிகவும் குறைவாக இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், இஸ்லாமிய ஆண்களை குறி வைத்து உடனடி முத்தலாக் தடை சட்டம் கொண்டு வரப்படுவதாக குற்றம்சாட்டினார்.
Discussion about this post