புதுக்கோட்டை அருகே 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையோரம் நிறுத்தம்

புதுக்கோட்டை அருகே மீன்பிடி தடைக்காலத்தை ஒட்டி, சுமார் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைகளில் நிறுத்தப்பட்டுள்ளன.

கடலில் மீன் இனங்கள் அழிவதை தடுப்பதற்கும், மீன் இனம் பெருகுவதற்கும் மீன்பிடித் தடைக்காலம் நாளை முதல் 61 நாட்களுக்கு அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில், சுமார் 600-க்கும் மேற்பட்ட விசை படகுகள் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டன.

போயா, கயிறு, வலை போன்ற மீன்பிடிச் சாதனங்களை பத்திரப்படுத்தி மீனவர்கள், வெயிலில் காயவைத்து வருகின்றனர். இதையடுத்து வங்கிகள் வட்டியில்லா கடன் தர முன்வர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Exit mobile version