நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் பெய்த கனமழை மற்றும் சூறைக்காற்றால் 300க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்தன.
நாங்குநேரி அருகே உள்ள கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் ஆஸ்திரேலியா, ரஷ்யா, சைபீரியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பறவைகள் வலசை வந்துள்ளன. இந்த ஆண்டு கூழைக்கடா, செங்கல் நாரை, சாம்பல் நாரை, கோணமூக்கு நாரை, நத்தை குத்தி, வெள்ளை அரிவாள் உள்ளிட்ட பறவைகள் சரணாயலத்தில் வந்து தங்கி உள்ளன.
இந்நிலையில், இங்கு பெய்த கனமழை மற்றும் அதையொட்டி வீசிய சூறாவளி காற்றால், அங்குள்ள மரங்கள் சரிந்து விழுந்தன. இதில் 300க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்தன.