சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் முன்னிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகி 200-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். விழுப்புரம் வடக்கு மாவட்டம் வல்லம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ்மாம்பட்டு, கொங்கரப்பட்டு, திருவம்பட்டு, கீழ்பாப்பாம்பாடி கிராமங்களை சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் 200-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.
அதிமுகவில் இணைந்தவர்களை, அமைச்சர் சி.வி.சண்முகம், பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அப்போது, ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சி சேவல் ஏழுமலை, வானூர் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
Discussion about this post