எதிரிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க மோடி தலைமையில் மத்தியில் மீண்டும் ஆட்சி அமைய வேண்டுமென முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்களவைத் தேர்தல், 18 தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறயிருக்கிறது. இதையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல்கட்டதேர்தல் பிரசாரத்தை 22ஆம் தேதி சேலத்தில் துவக்கி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரியில் நேற்று முடித்தார். இந்நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்தை ராயபுரத்தில் இன்று மாலை துவக்கிய முதலமைச்சர், சென்னை வடக்கு மக்களவை தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன் ராஜூக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். எதிரிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய வேண்டுமென முதல்வர் கேட்டுக்கொண்டார்.
மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்கள் மக்களுக்காக வாழ்ந்தவர்கள் என்று குறிப்பிட்ட முதலமைச்சர், அதிமுக அரசு செய்த சாதனைகள் ஏராளம் என்று, ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்தார்.
Discussion about this post