‛ஜி-7 மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ள பிரதமர் மோடி உலக தலைவர்களை சந்தித்தார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே பியாரிட்ஸ் நகரில் நடைபெறும் ‛ஜி-7′ எனப்படும் வளர்ந்த பொருளாதாரத்தை உடைய ஏழு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சிமாநாட்டில் சிறப்பு விருந்தினராக இந்திய பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும் என பிரான்ஸ் அதிபர் மேக்ரான் அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்று இம்மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நேற்றிரவு பாரிஸ் சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஜி7 மாநாட்டில் தலைவர்களுக்கான சிறப்பு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோடி, கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடே, சீன அதிபர் ஜீ ஜின்பிங் உள்ளிட்ட பல்வேறு நாட்டு அதிபர்களை மோடி சந்தித்தார். ‛ஜி-7′ நாடுகளின் மாநாட்டின் தொடர்ச்சியாக அமெரிக்க அதிபர் டிரம்பை இன்று மோடி சந்தித்துப் பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பின் போது இரு நாட்டு உறவு, பாதுகாப்பு ஆகியவற்றோடு காஷ்மீர் விவகாரம் குறித்தும் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என கூறப்படுகிறது.
Discussion about this post