குஜராத் மாநிலம் காந்திநகரில் 3 நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். குஜராத்தின் காந்திநகரில் 9வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று துவங்கியுள்ளது. மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த மாநாட்டில் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் அதிபர்களும் கலந்து கொண்டனர். மாநாட்டை துவக்கி வைத்த பிரதமர் மோடி, அந்நாட்டு தலைவர்களுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தி, அந்நாடுகளுடனான வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
இதனிடையே, காந்திநகரில் துவங்கியுள்ள இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் பெரிய நிறுவனங்களை சேர்ந்த 30 ஆயிரம் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இதையொட்டி நடைபெறும் வர்த்தக கண்காட்சி வரும் 22ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இறுதி 2 நாட்கள் இந்த கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Discussion about this post