சர்வதேச யோகா தினம் வரும் 21ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், கடந்த இரு தினங்களாக யோகாக்களை பதிவிட்டு வருகிறார். மோடியின் அனிமேஷன் உருவத்தில் விருக்ஷாசனா வீடியோவை அவர் இன்று பதிவிட்டுள்ளார். யோகா தினம் 2019 என்ற ஹேஷ்டேக்கையும் மோடி பயன்படுத்தியுள்ளார். இந்த யோகாவை செய்வதன்மூலம் தசைகள் வலுப்பெறுவதாகவும், உடல்பருமன் உள்ளிட்ட கோளாறுகள் சரிசெய்யப்படும் என்றும் அவர் அதன் பலன்களையும் பட்டியலிட்டுள்ளார்.
Discussion about this post