குஜராத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி நலதிட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, முறைப்படுத்தப்படாத துறை ஊழியர்களின் ஓய்வூதியத்தை 15 ஆயிரம் ரூபாய் வரை அளிக்கும் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து ஜனம்நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை திறந்து வைத்தார். மேலும், அஹமதாபாத்தில் 6 கிலோ மீட்டர் மெட்ரோ சேவையை தொடங்கி வைத்ததுடன், 28 கிலோ மீட்டர் மெட்ரோ ரயில் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ள உமயாதம் கோவிலுக்கு அடிக்கல் நாட்டியதுடன் நீர் வளத்திட்டங்கள் உள்ளிட்ட நலப்பணி திட்டங்களை தொடங்கி வைத்தார்.