மேற்கு வங்கத்தில் மோடி போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படவில்லை:அமித் ஷா

பிரதமர் நரேந்திரமோடி குஜராத்தில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். இந்நிலையில் மேற்கு வங்கத்தின் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட மேற்கு வங்க பாஜக கோரிக்கை விடுத்திருந்தது. அக்கட்சியின் மூத்த தலைவர் முகுல் ராய் சமீபத்தில் இந்தக் கருத்துகளை தெரிவித்து இருந்தார்.இந்நிலையில் கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா நரேந்திர மோடி மேற்கு வங்கத்தில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டார்.

Exit mobile version