வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு பகுதியில் இருந்து மத்திய இந்தியா வரை வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் தெற்கு மற்றும் டெல்டா பகுதியிலும் மேலடுக்கு சுழற்சி நீடிக்கிறது. இதன் காரணமாக தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. எனவே, தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.