ஏற்றத்தாழ்வை உருவாக்கும் “மாடல் பள்ளிகள்”! கற்றல் திறனில் நவீன தீண்டாமையை உட்செலுத்தும் விடியா அரசு!

வெறும் 2000 பேர் படிக்கும் மாடல் ஸ்கூலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் 3.5 லட்சம் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விடியா திமுக அரசு, அரசுப் பள்ளி மாணவர்களைக் கருத்தில் கொள்ளுமா? சற்று விரிவாக பார்க்கலாம்!

மாதிரிப் பள்ளிகள்..!

அதாவது தமிழகப் பள்ளிக்கல்வித்துறை சார்பில்  38 மாவட்டங்களில் “மாதிரிப் பள்ளிகள்” செயல்படுகிறது. அதில் 2000 மாணவ, மாணவியர்கள் படித்துவருகின்றனர். இந்த 2000 மாணவ மாணவியர்களும் யார் என்றால், பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்புகளில் ஸ்கூல் டாப்பர் எடுத்தவர்கள். இன்னும் விளங்கச் சொல்வதென்றால் நன்றாகப் படிக்கக் கூடிய மாணவர்களை மட்டும் இந்த மாதிரிப் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். அவர்களை இன்னும் மெருகேற்றி அவர்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்குகின்றது இந்த மாதிரிப் பள்ளிகள். தற்போது இதுதான் இங்கு சிக்கல். கொஞ்சம் சுமாராகவும், மெதுவாகவும் கற்கும் திறன் உள்ள மாணவர்களின் நிலை என்னாவது?

ஏற்றத் தாழ்வு காட்டும் அரசு..!

இந்த அரசு ஏற்றத்தாழ்வு பார்க்காத அரசு என்று கூறினால் மட்டும் போதாது. களத்தில் அதை செயல்படுத்தியும் காட்ட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வெறும் 2000 பேர் மட்டும்தான் மாணவர்களா என்ன? ஒவ்வொரு மாணவ மாணவியர்களின் கல்வியும் இங்கு முக்கியம். அதற்காகத்தான் அன்றைக்கு கர்மவீரர் காமராசர் மூடியிருந்த 6000 பள்ளிகளைத் திறந்தார். மாணவர்களிடம் ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் பள்ளிகளில் ஒரே மாதிரியான சீருடைகள், ஒரே மாதிரியான கல்வி போன்றவை அளிக்கப்பட்டுள்ளன. இதில் மாணவர்களின் அறிவுச் செயல்பாட்டினைக் கொண்டு, அவரவர்களுக்கு ஏற்றவகையில் பாடங்கள் நடத்துவது என்பது தவறில்லை. கற்றல் திறனில் அனைவருக்குமே வித்தியாசம் இருக்கத்தான் செய்யும். ஆனால் இந்த “மாதிரிப் பள்ளிகளின்” விசயத்தில் திமுக அரசும் அதன் பள்ளிக்கல்வித் துறையும் அவ்வாறு நடந்துகொள்வதாக தெரியவில்லை. நன்றாகப் படிப்பவர்களை கூடுதல் பொறுப்புடன் கவனிக்கும் தன்மை நிலவுகிறது. ஆனால், சரியாக படிக்க முடியாதவர்களைத் தான் நாம் கூடுதல் பொறுப்போடு கவனித்து கற்றல் ஆற்றலை பெருக்க வேண்டும்.

அரசின் இந்த செயல்பாட்டால், மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் மிகுந்த அதிர்ச்சிக்கும் நெருக்கடிக்கும் உள்ளாகியுள்ளனர். எங்களது பிள்ளைகள் மட்டும் என்ன குறைந்தவர்களா என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 3.5 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களின் வாழ்க்கையில் இந்த விடியா திமுக அரசு விளையாடி வருகிறது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Exit mobile version