சொல்லுங்க மாமா குட்டி! இனி செல்போனை கையில் எடுத்தால், விடாது கருப்பு!

செல்போனை கையில் எடுத்தால், விடாது கருப்பாக பேசிக் கொண்டிருக்கும் மாமா குட்டிகளா நீங்கள்…. உங்களுக்கு ஆப்பு வைப்பது போல எச்சரிக்கை வெளியிட்டிருக்கின்றன ஆய்வு முடிவுகள்… அது என்ன? பார்ப்போம்..

தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இன்றைய நவீன உலகத்தில் மனிதர்களின் 6வது விரலாக ஒட்டிக்கொண்டே இருக்கும் ஒரு கருவி தான் செல்போன். ஷாப்பிங் முதல் சாட்டிங் வரை…. உரையாடல் தொடங்கி பணபரிவர்த்தனை வரை எல்லாமே போன் மூலமே நடக்கிறது. செல்போனால் எந்த அளவுக்கு நன்மைகள் உள்ளதோ, அதே அளவுக்கு தீமைகளும் கண்ணுக்கு தெரியாமல் நம்மை ஆட்டிப்படைத்து கொண்டு தான் இருக்கிறது.

செல்போனால் எத்தகைய ஆபத்து உள்ளது என்பதை நிரூபிக்கும் பொருட்டு வெளியான ஆய்வு முடிவு ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வாரத்திற்கு 30 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் போன் பேசுபவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் வர வாய்ப்பிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. தொடர்ந்து பேசுகையில், மொபைல் போன்கள் வெளியிடும் ரேடியோ அலைகள், உயர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்க காரணமாக அமைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. உயர் ரத்த அழுத்தத்தால்தான் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுகிறது என எச்சரிக்கிறது மருத்துவ உலகம்

தொலைபேசி அழைப்புகளுக்கும் இரத்த அழுத்தத்திற்கும் இடையே உள்ள தொடர்பை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 37 முதல் 73 வயதுடைய மொத்தம் 2லட்சத்து12ஆயிரத்து 46 பேரிடம் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் நடத்திய ஆய்வில், ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் போனில் பேசுகிறார்கள், ஸ்பீக்கம் மூலம் எவ்வளவு நேரம் பேசுகிறார்கள் என்ற தகவல்களை பெற்றுள்ளனர். இதில் அதிக அளவில் மொபைலை பயன்படுத்திய 7 சதவீதம் பேருக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. .

அதேபோல, வாரத்துக்கு 30 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் போன் பேசுபவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு 12 சதவீதம் அதிகமாக உள்ளது. வாரத்தில் 30 முதல் 50 நிமிடங்கள் பேசுவோருக்கு 8 சதவீதமும், 1 முதல் 3 மணி நேரம் வரை பேசுவோருக்கு 13 சதவீதமும், 4 முதல் 6 மணி நேரம் பேசுவோருக்கு 16 சதவீதமும், 6 மணி நேரத்திற்கும் மேல் பேசுவோருக்கு 25 சதவீதமும் உயர் இரத்த அழுத்தம் வர வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

இந்த ஆய்வு முடிவுகள் மணிக்கணக்கில் போனில் குடும்பம் நடத்தும் மாமா குட்டிகளுக்கு அதிர்ச்சியையே பரிசாக அளித்துள்ளது… அளவோடு செல்லில் பேசி நலமோடு வாழ்வோம்.

– உமேஷ் அங்கமுத்து, செய்தியாளர்.

 

Exit mobile version