போக்குவரத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் வழக்கு பதிந்துள்ளனர்.
மத்திய குற்றப்பிரிவு என்பது முதல்வர் ஸ்டாலினின் கீழ் இயங்கும் காவல்துறையின் மற்றொரு அங்கமாக செயல்பட்டு வருகிறது. போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது 81 பேருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.62 கோடி பெற்று மோசடி செய்ததாக செந்தில் பாலஜி மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
2018ம் ஆண்டு வாக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தான், கடந்த மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். செந்தில் பாலாஜி உத்தமர், அவர் ஒரு அமைச்சர், அவரை எப்படி கைது செய்யலாம் என்று வாய்கிழிய பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது தனக்கு கீழ் உள்ள காவல்துறையின் மற்றொரு பிரிவான மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் மூலம் செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்துள்ளார். அதாவது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. செந்தில் பாலாஜி குற்றமற்றவர் என்பதாலும், அவர் குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்பதாலும், அவர் அமைச்சரவையில் தொடர்வதில் தவறு இல்லை என்று பேசிய முதல்வர் ஸ்டாலின், இப்போது தனக்கு கீழ் உள்ள காவல்துறையே செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிந்திருப்பதை என்ன சொல்ல சமாளிக்கப்போகிறார்? தனக்கு கீழ் உள்ள காவல்துறையே செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்துள்ள நிலையில், இன்னமும் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் வைத்திருக்கப்போகிறாரா முதலமைச்சர் ஸ்டாலின்?