டெல்டா மாவட்டங்களுக்கு பயணிக்கும் ஸ்டாலின்! எந்த பயனும் இல்லை! திருந்துமா திமுக?

தமிழ்நாட்டை ஆண்டுகொண்டு இருக்கும் விடியா திமுக அரசும் அதன் தலைவருமான விடியா முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்டா மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணத்தினை மேற்கொண்டுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தினை ஆய்வு நோக்குக்காக மேற்கொள்கிறார் என்று சொல்லப்படுகிறது. முக்கியமாக காவிரி டெல்டா பாசன கால்வாய், நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்கிறார் என்று விவரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். பிறகு 12ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நீரை திறந்துவிடுவார் என்றும் சொல்லப்படுகிறது.

இதுவெல்லாம் ஒருபுறம் இருக்க, மறைமுகமாக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வேலையை சலிக்காமல் பார்த்து வருகிறது இந்த விடியா திமுக அரசு. நல்லது செய்வதுபோல ஒரு முலாம் பூசுதலை செய்து பின்னணியில் விவசாயிகளுக்கு பாதகம் ஏற்படுத்தும் பணியில் செவ்வனே தங்கள் பணியினை மேற்கொள்கின்றனர். மேட்டூர் அணையைத் திறந்து என்ன புண்ணியம், மேகதாது அணைக் கட்டுவதை தடுக்க முதல்வருக்கு நெஞ்சுரம் உண்டா என்று பொதுமக்களும் விவசாயிகளும் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது மேட்டூர் அணையைத் திறந்துவிட்டு மக்கள் மத்தியில் நற்பெயரை பெறும் நோக்கில் என்ன செயல் வேண்டுமானாலும் செய்யாலாம். ஆனால் பின்னாளில் ஏற்படப்போகும் மிகப்பெரிய பாதிப்புக்கு திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதேனும் எடுத்துள்ளதா என்பது அரசியல் விமர்சகர்களின் கேள்வியாக உள்ளது.

தன்னை டெல்டாக்காரன் என்று வழிமொழிந்து பெருமைப்படும் திரு.ஸ்டாலின் அவர்கள், தேர்தலில் கர்நாடக காங்கிரஸுக்கு ஆதரவு அளித்தார். அப்படியென்றால் அவர்களின் தேர்தல் அறிக்கைக்கும் ஆதரவு அளித்திருப்பார்தானே. தேர்தல் அறிக்கையில் மேகதாது அணைக் கட்டுவது குறித்தான திட்டத்திற்கு ஏன் முன் கூட்டியே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக, கர்நாடக காங்கிரஸை சேர்ந்த துணை முதல்வர் டி.கே.சிவக்குமாருடன் கொஞ்சிக் குலாவி புகைப்படம் எடுத்து விளம்பர அரசாக உருவெடுத்திருப்பது எந்த மாதிரியான மனநிலை என்று புரியவில்லை என்று அரசியல் நோக்கர்கள் தங்களின் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். திருந்துமா திமுக? என்பதே அனைவரின் வாதமாக இருக்கிறது.

Exit mobile version