மாதம் ரூ.12 ஆயிரமா. அடேங்கப்பா… உளறிக் கொட்டிய ஸ்டாலின்!

விடியா ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் 12 ஆயிரம் வழங்க உள்ளதாக மேடையில் ஸ்டாலின் உளறிக் கொட்டியுள்ளார். அந்தரத்தில் ஆடிய மின்விசிறிகள், ஸ்டாலின் பேசும்போதே வெளியேறிய பெண்கள் என ஒட்டுமொத்தத்தில் ஒரு சொதப்பல் கூட்டமாக நடந்து முடிந்துள்ளது… இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்…

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக இருக்கும் 3 கோடிக்கும் மேற்பட்ட பெண் வாக்காளர்களில், வெறும் 1 கோடி பேருக்கு மட்டுமே உரிமைத் தொகையை வழங்கிவிட்டு மீதிப் பெண்களுக்கு கல்தா கொடுத்துள்ளார் ஸ்டாலின். கட்சிக்காரர்களின் ஆதரவாளர்களுக்கு மட்டும் காசை வழங்கிவிட்டு ஏதோ அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியதாக பெருமை பீற்றிக்கொண்டிருக்கிறார்.

இப்படி பல தகிடுதத்தங்களுக்கு மத்தியில் அரங்கேற்றப்பட்டுள்ள திட்டத்தின் தொடக்க விழா காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. கூட்ட அரங்கு முதல் ஏற்பாடுகள் வரை அனைத்திலும் சொதப்பி, இது ஒரு லாயக்கற்ற டிராமா கம்பெனி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது விடியா திமுக.

கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மகளிர் அமர வைக்கப்பட்டிருந்த இடத்தில் தலைக்கு மேல் ஓடிக்கொண்டிருந்த மின் விசிறி ஒன்று திடீரென ஆட்டம் கண்டது. கொஞ்சம் விட்டால் தலையில் விழுந்துவிடும் போலயே என அங்கிருந்த பெண்கள் பதறியடித்தபடி எழுந்து ஓடினர். விடியா ஆட்சியைப் போலவே நிலையில்லாமல் ஆடிக்கொண்டிருந்தன அந்த மின்விசிறிகளும். வலுக்கட்டாயமாக உட்கார வைக்கப்பட்டிருந்த பெண்களோ மூஞ்சியில் ஒரு உற்சாக ரேகையில்லாமல் சோகம் வடிந்து காணப்பட்டனர். இந்நிலையில் தொடர்ந்து பல ஃபேன்கள் மக்கர் பண்ண, அங்கிருந்த திமுகவினர் சுமார் 70 மின்விசிறிகளை நிறுத்திவிட்டனர். இதையடுத்து வெக்கையில் புழுக்கம் தாங்காமல், பாதி பெண்கள் ஸ்டாலினின் பேச்சைக் கூட கேட்க முடியாமல், விட்டால் போதும் சாமி என சாமியானா பந்தலை பிரித்துக் கொண்டு கூட்டத்தை விட்டு வெளியேறி தப்பிச் சென்றனர்.

கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் வழக்கம்போல உளறிக் கொட்டினார். துண்டுச் சீட்டு இருந்தாலே ஒழுங்காய் படிக்கத் தெரியாத மனிதர், மனப்பாடம் செய்து ஒப்பிப்பதுபோல பேசிக் கொண்டிருந்தார். ஆர்வத்தில் பேசியவர், ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் எனக் கூறுவதற்கு பதிலாக மாதம் 12 ஆயிரம் உரிமைத் தொகை வழங்க உள்ளோம் என உளறிக் கொட்டியதைக் கேட்டு கூட்டத்தில் இருந்த பெண்கள் “களுக்” எனச் சிரித்தனர். ஆயிரத்துக்கே இந்த பாடுபடுறோம், 12 ஆயிரம் எல்லாம் குடுத்துட்டா எங்க தலை மேல ஏறி இல்ல உட்காந்திருவீங்கனு என கூட்டத்துக்கு வந்த பெண்களே கமெண்ட் அடித்தனர்.

இந்தக் கூட்டத்தைக் கூட ஏதோ தனது குடும்ப விழாவென நினைத்துவிட்டார் போல ஸ்டாலின். கருணையுள்ளம் கொண்ட தாய், தூண் போன்று உறுதுணையாக நிற்கும் மனைவி, பாசமே உருவான மகள் என தன் வீட்டு பெண்களை மட்டும் பெருமையாக பேசிய ஸ்டாலின், தனது தங்கை கனிமொழி பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தாய், மனைவி, மகளைப் பற்றி மட்டுமே பேசிய ஸ்டாலின் கனிமொழியின் பெயரைத் தவிர்த்ததன் பின்னால் இருந்த அரசியல் புரிந்ததோ என கூட்டத்துக்கு வந்த பெண்கள் கமெண்ட் அடித்தனர். “தங்கச்சியவே கண்டுக்கல, இவங்கள நம்புனா நமக்கும் இதான்டி நிலைமை” என கூட்டத்தைவிட்டு பாதியிலேயே தப்பிச் சென்றனர்.

Exit mobile version