“மிஷன் சந்திராயன் – 3”… ஜூலை மத்தியில் நிலவுக்கு செல்கிறது!

இந்திய விண்வெளித் துறையைப் பொறுத்தவரை நிலவு ஆராய்ச்சியில் சிறந்து விளங்கிவருகிறது. ஏற்கனவே சந்திராயன் ஒன்று, இரண்டு என்று இரு செயற்கைகோள்களை நிலவுக்கு அனுப்பியிருந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக நிலவினை ஆராய்வதற்கான வேலையில் இஸ்ரோ இறங்கியுள்ளது. இதற்கு  “மிஷன் சந்திராயன் 3” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை மாதம் மத்தியில் செயல்பட போகிறது.

சந்திராயன் 2ஐத் தொடர்ந்து…

2019 ஆம் ஆண்டு சந்திராயன் 2-ஆனது நிலவினை ஆராய அனுப்பப்பட்டிருந்தது. அதில் உள்ள லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய கருவிகளுக்கு விக்ரம் மற்றும் ப்ரக்யான் என்கிற பெயர் சூட்டப்பட்டிருந்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தையான விக்ரம் சாராபாயின் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து இப்போது சந்திராயன் 3-ல் செயல்பட இருக்கும் லேண்டருக்கு விக்ரம் பெயரையே சூட்டுவதற்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் வழிவகை செய்துள்ளார். சந்திராயன் இரண்டைப் பொறுத்தவரை அதன் லேண்டரும் ரோவரும் நிலவின் லூனார் பகுதியில் விழுந்து சிதறியது.

சந்திராயன் 3.. எப்போது…!

சந்திராயன் 3 ஆனது எல்வி3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஜூலை மாதத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் ஏவப்பட இருக்கிறது.இந்த விண்கலம் 100 கிமீ சந்திர சுற்றுப்பாதையில் செல்லும் வரை உந்துவிசை தொகுதி லேண்டர் மற்றும் ரோவர் கட்டமைப்பை கொண்டு செல்லும்.

Exit mobile version