இந்தோனேசியாவில் காணாமல் போன விமானத்தின் பாகங்கள் ஆயிரம் தீவுகள் அருகே உள்ள கடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து போன்டியானெக் ((pontianak)) நோக்கி புறப்பட்ட போயிங் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அதன் தொடர்பு ரேடாரிலிருந்து மறைந்தது. இதனையடுத்து, விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்ட கடல் பகுதியில் இருந்து அந்நாட்டு அரசு தேடுதல் பணியை தொடங்கியது. இந்த நிலையில், காணாமல் போன விமானத்தின் பாகங்கள் ஆயிரம் தீவுகள் அருகே உள்ள கடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும், மீட்புக் குழுக்கள் அடங்கிய கப்பல் அப்பகுதிக்கு சென்றுள்ளது. இதனிடையே, விமானம் புறப்படும் முன்பு நல்ல நிலையில் இருந்ததாகவும், கனமழை காரணமாக 30 நிமிடங்கள் விமானம் தாமதமாக புறப்பட்டதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
Discussion about this post