அமைச்சர் FIRST – ஐ.ஏ.எஸ். NEXT நாடகமாடும் ஸ்டாலின்! அமைச்சரவை மட்டும் மாற்றமில்லை ஐஏஎஸ்-களும் மாற்றம்!

அமைச்சரவை மாற்றத்தோடு, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றமும் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஐ.ஏஸ். அதிகாரிகள் விஷயத்தில் ஸ்டாலின் நாடகமாடுவது குறித்துச் சொல்கிறது இந்தக் கட்டுரை.

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுவது உறுதியாகி உள்ளதால், அறிவாலய வட்டாரங்களில் அனலடித்துக்கிடக்கிறது. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நாசர், கயல்விழி செல்வராஜ் ஆகிய 3 அமைச்சர்கள் தூக்கப்படுவதாகவும், தங்கம் தென்னரசு, சிவசங்கர் ஆகியோருக்கு இலாகா கூடுதல் மற்றும் இலாகா மாற்றம் நடப்பதாகவும், டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. முக்கியமாக உதயநிதியை துணை முதல்வராக்கும் முயற்சிகளும் நடக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில்அமைச்சர்கள் மட்டுமல்லாமல், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் மாற்றமும் நடைபெற உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது. துறை அமைச்சர்களுக்கும் – துறை செயலாலர்களான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும் இடையே நிகழும் முட்டல் மோதலே இந்த மாற்றங்களுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, துறை செயலாளர் அமுதா, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா என்று இலைமறைக்காயாக இவர்களின் மோதல்கள் வெளியே தெரிந்தாலும் பல்வேறு துறை அமைச்சர்களுக்கும், துறை செயலர்களான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும் பிணக்கு தொடர்வதாகச் சொல்கிறார்கள்.

இதுகுறித்து திமுக தலைமையிடமும் அமைச்சர்கள் அங்கலாய்த்துள்ளதால், அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் மாற்றமும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் கூட, மே தின கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னாள் எம்.பி., டி.கே.ரங்கராஜன் தமிழகத்தை திமுக அரசு ஆட்சி செய்கிறதா? அல்லது அதிகாரிகளும், முதலாளிகளும் சேர்ந்து ஆட்சி செய்கிறார்களா? அதிகாரிகள் அரசை தவறாக வழி நடத்துகிறார்களா என்று கேள்வி எழுப்பியதும் இந்தப் பிணக்குகளை முன்வைத்துத்தான் என்கிறார்கள்.

திமுக அரசை அதிகாரிகள் தவறாக வழிநடத்துகிறார்கள் என்று தவறான தகவலை டி.கே.ஆருக்கு சொன்னது யார் என, அதற்கு பதில் கேள்வி எழுப்பியது திமுக.
ஏற்கனவே, நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைத்தான் தாங்கள் வைத்துள்ளதாக மக்கள் மன்றத்திலும் ஒரு பிம்பத்தை கட்டவிழ்த்து உள்ளது.

இப்படியெல்லாம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு திமுக ஆட்சி ஆதரவளிப்பது போன்று தோற்றத்தை ஏற்படுத்தினாலும், திமுக அமைச்சர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தரும் தேவையற்ற அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வகையில் அவர்களைக் கண்டிக்காமல், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்ய மேற்கொள்ளும் நடவடிக்கை என்பது, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் விஷயத்திலும் ஸ்டாலின் நாடகமாடுவதாகவே கருதப்படுகிறது.

Exit mobile version