கிருஷ்ணா நதி நீர் விவகாரம், பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டும் விவகாரம் குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிருஷ்ணா நதி நீர் திட்டமானது சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டதாகும். இதன்படி, கிருஷ்ணா நதியிலிருந்து சென்னைக்கு போதிய நீர் திறப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் ஆந்திரா செல்ல உள்ளனர். சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளும், அமைச்சர்களுடன் ஆந்திரா செல்கின்றனர்.
Discussion about this post