விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏழரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை மைய கட்டடத்தை அமைச்சர்கள் சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.
நான்கரை கோடி ரூபாய் மதிப்பில் இதய சிகிச்சை பிரிவு மற்றும் 38 படுக்கை வசதிகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு போன்றவற்றை அமைச்சர்கள் திறந்து வைத்து பார்வையிட்டனர். சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர்கள், அவர்களுக்கு தேவையானவற்றை செய்து தர மருத்துவர்களுக்கு உத்தரவிட்டனர்.
மருத்துவமனை கூட்ட அரங்கில் நடைபெற்ற திறப்பு விழாவில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக சுகாதாரத்துறை உலக அளவில் சிறந்து விளங்கி வருவதாக பெருமிதம் தெரிவித்தார். செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறையில் ஆயிரத்து 155 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றார்.