பொள்ளாச்சியில் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க கட்டடத்திற்கு அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமைலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
2 கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்படும் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கான கட்டிட பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, உடுமைலை ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர். முன்னதாக நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
இதனைதொடர்ந்து நடைபெற்ற நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில், 26 ஆயிரத்து 607 பயனாளிகளுக்கு 4 கோடியே 25 லட்ச ரூபாய் மதிப்பிலான உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கோவை மாவட்டத்தில் 50 ஆண்டுக்கான வளர்ச்சியை ஐந்தே ஆண்டுகளில் செய்து முடித்துள்ளதாக கூறினார்.
Discussion about this post