முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு…!
ஆளும் விடியா அரசு மக்களை சூடாக்குகிறது. ஆனால் மக்களை குளிர்ச்சியாக வைத்துள்ள இயக்கம் அதிமுகதான். எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் மீனவர்களின் பகுதிகளை அகற்றவது தவறு. அவர்களைக் கூப்பிட்டு காவல்துறையும் சென்னை மாநகராட்சியினரும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கவேண்டும். இது இடியமீனின் சர்வாதிகார ஆட்சி போல் செயல்படுகிறது. கடலும் கடல் சார்ந்த இடமும் மீனவர்களுக்கு உரியது. அரசும் அவர்களின் வாழ்வாதரத்தை கேள்விக்குள்ளாக்குகிறது என்று தன்னுடைய கருத்தினை தெரிவித்தார்.
பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் நாட்டிலுள்ள அவலநிலையைப் பற்றி பேசுகிறார். குறிப்பாக நேற்று திமுக கவுன்சிலர் ஒருவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவரை ஏசி அறையில் வைத்து நன்றாக கவனிக்கிறார்கள். இது போன்ற குற்றங்களை சுட்டிக்காடினால் எதிர்க்கட்சித் தலைவரின் மைக்கை கட் செய்கிறார்கள். வெறும் சபாநாயகர் மட்டுமே பேசுகிறார். முதல்வருக்கும் உதயநிதிக்கும் சட்டபேரவையில் ஜால்ரா அடிக்கிறார்கள் திமுக அமைச்சர்கள். மார்ச் 25 ஆம் தேதி 1989ல் புரட்சித் தலைவி அம்மா அவர்களை திமுகவினர் அசிங்கபடுத்தினார்கள். திமுகவிற்கு அசிங்கப்படுத்துவம் கொச்சைப்படுத்துவம் கை வந்த கலை. மக்கள் இதனை கவனித்துதான் வருகிறார்கள். தக்க பதிலடி கொடுப்பார்கள். பால் உற்பத்தியாளர்கள் போரட்டம் குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் ஆவினை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறது திமுக என்று குறிப்பிட்டார்.