புதுக்கோட்டை மாவட்டத்தில், அரசு மருத்துவமனையில் 32 படுக்கைகளுடன் கூடிய புதிய கட்டிடம் மற்றும் அறுவை சிகிச்சை அரங்கை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில், அரசு மருத்துவமனையில் 32 படுக்கைகளுடன் கூடிய புதிய கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெற்றது. மருத்துவமனையின் புதிய கட்டிடத்தையும், நவீன அறுவை சிகிச்சை அரங்கையும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், நோயாளிகளை செவிலியர்கள், மருத்துவர்கள் இன்முகத்தோடு வரவேற்று, சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறினார்.
Discussion about this post