தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சிட்லபாக்கம் மற்றும் மாடம்பாக்கம் பேரூராட்சிகளில் 3 கோடி ரூபாய் மூலதன மானிய நிதியில் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதனை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பெஞ்சமின் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, போதிய மழை பெய்யாததால் தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியை சுட்டிக் காட்டினார். குடிநீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருவதாக கூறிய அவர், திமுக ஆட்சியை விடவும் 2 ஆயிரத்து 400 எம்.எல்.டி கூடுதலாக சேர்த்து நாள் ஒன்றுக்கு 7 ஆயிரத்து 300 எம்.எல்.டி குடிநீர் விநியோகிக்கப்படுவதாக தெரிவித்தார்.
Discussion about this post