திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வாக்கு சேகரித்தார்.
தண்டராம்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட ரெட்டியார் பாளையம், மலையனூர் செக்கடி, பீமாரப்பட்டி, ஆத்திப்பாடி, புளியம்பட்டி, நாராயண குப்பம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதி வீதியாக சென்று, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்கும்படி வாக்காளர்களிடம் அமைச்சர் பிரசாரம் செய்தார். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்தும், பொதுமக்கள் சால்வை அணிவித்தும் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.