மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் சொந்த மாவட்டத்தில் கூடுதல் விலை வைத்து மதுபானம் விற்றதை தட்டிக்கேட்ட முதியவரை, டாஸ்மாக் கடை ஊழியர் தடியால் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
கரூர் மாவட்டம் கா.பரமத்தி ஒன்றியம், தென்னிலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கச் செல்பவர்களிடம் கூடுதல் விலை வைத்து மது விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. உரிய விலையைவிட 10 ரூபாய் அதிகம் வாங்கிக்கொண்டு மது விற்பனை செய்ததை, முதியவர் ஒருவர் தட்டிக் கேட்டுள்ளார். கேள்விகேட்ட முதியவரை டாஸ்மாக் கடை ஊழியர் தடியால் அடிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் சொந்த மாவட்டத்திலேயே மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பதை தட்டிக் கேட்ட முதியவருக்கு டாஸ்மாக் ஊழியர் தாக்கிய வீடியோ வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post