கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரம் குறித்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.
திருப்பூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் மக்களவை தொகுதி பொறுப்பாளரும் பள்ளிகல்விதுறை அமைச்சருமான செங்கோட்டையன் அதிமுக,பாஜக,தேமுதிக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பது, முதல்வரின் 67 வகையான திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துரைப்பது, வலுவான அரசு மத்தியில் அமைய வேண்டும் என்பதை வாக்காளர்களுக்கு எடுத்துரைப்பது தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டது. அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Discussion about this post