பின்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், சூழ்நிலையியல் விவசாயம் குறித்து அறிந்து கொள்ள அந்நாட்டின் வேளாண்மை பண்ணையை நேரில் சென்று பார்வையிட்டார்.
தமிழகத்தில் பள்ளிக்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக அமைச்சர் செங்கோட்டையன், பின்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது பின்லாந்து நாட்டில் செயல்படுத்தப்படும் அறிவியல், கல்வி தொடர்பான செயல்பாடுகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். அப்போது பின்லாந்து நாட்டின் கலாச்சாரத்துறை அமைச்சர், செயலர் மற்றும் பன்னாட்டு தொடர்பு அதிகாரி ஆகியோருடன் அவர் கலந்துரையாடினார். இந்த உரையாடலின் போது மாறுபட்ட கல்விமுறை, சூழ்நிலையியல் விவசாயம் குறித்து அறிந்து கொள்ள அங்குள்ள வேளாண்மை பண்ணையை அமைச்சர் பார்வையிட்டார்.
Discussion about this post