கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே இந்தியன் வங்கியின் புதிய கிளையை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.
தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட குனியமுத்தூரில், இந்தியன் வங்கியின் புதிய கிளையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். இதையடுத்து, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான 2 கோடி ரூபாய் கடனுக்கான காசோலையை அமைச்சர் வேலுமணி வழங்கினார்.
அப்போது பேசிய அவர், கடந்த 7 ஆண்டுகளாக அதிமுகவின் ஆட்சியில், அரசு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு தொடர்ந்து அதிகளவில் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
Discussion about this post