விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைள் குறித்து, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் அமைச்சர்கள் மாவட்டம் வாரியாக ஆய்வுகள் மேற்கொண்டு, தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கண்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜவர்மன், சந்திரபிரபா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்க தடையின்றி கிடைப்பது குறித்தும், ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து, தடுப்பு பணிகளை மேலும் துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
Discussion about this post