சித்தலிங்கமடம் கிராமத்தில், அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இத்தகைய அரசு நிகழ்ச்சிகளில் ஊராட்சி தலைவருக்கும் இருக்கை கொடுத்து அமர வைப்பது வழக்கம். ஆனால் நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி, மாவட்ட ஆட்சியர், தொகுதிக்கு சம்பந்தமில்லாத விக்கிரவாண்டியை சேர்ந்த திமுக மாவட்ட செயலாளர், மற்றும் விழுப்புரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஆகியோருக்கு மட்டும் இருக்கைகள் போடப்பட்டன. சித்தலிங்கமடம் ஊராட்சி மன்ற தலைவர் கெங்கை அம்மாள், இருளர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அவருக்கு இருக்கை தராமல் அவமதிக்கப்பட்ட அவலம், விடியா ஆட்சியில் அரங்கேறியுள்ளது. சமூக நீதி பேசும் திராவிட மாடல் ஆட்சியில், அராஜக அமைச்சர் பொன்முடி பங்கேற்கும் நிகழ்ச்சியில், சாதிய வன்மம் தொடர் கதையாகி வருகிறது.
Discussion about this post