விடியா திமுக ஆட்சியில் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொள்ளும் நிகழ்ச்சிகளை அரசு அதிகாரிகள் புறக்கணிப்பது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. அந்தப் பட்டியலில் தற்போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழியும் இணைந்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் மாணவியர் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் உணவு, அடிப்படை வசதிகளில் குறைபாடு இருப்பதாக மாணவிகள் குற்றம்சாட்டியிருந்தனர். இந்த நிலையில் தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, திண்டிவனம் அரசு கலைக் கல்லூரி மாணவியர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
அந்த ஆய்வின் போது திமுக அமைச்சரை சூழ்ந்துகொண்ட மாணவிகள் விடுதியில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டினர். இதனால் அமைச்சர் கயல்விழி பதில் சொல்ல முடியாமல் திணறினார்.
இது ஒருபுறம் இருக்க, அமைச்சர் ஆய்வு குறித்து மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், சார் ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தும் ஆய்வு நிகழ்ச்சிக்கு வராமல் அதிகாரிகள் புறக்கணித்துள்ளனர்.
அமைச்சர் கயல்விழி ஆய்வு செய்தபோது பெயரளவிற்கு நின்றிருந்த அமைச்சர் செஞ்சி மஸ்தானும், ஆய்வு முடிவதற்கு முன்பாகவே பாதியிலேயே கழன்று கொண்டார். இதனால் உடன் பிறப்புகள் செய்வதறியாது தங்களுக்குள்ளேயே புலம்பிக்கொண்டனர்.
திராவிட மாடல் ஆட்சியில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சருக்கே இந்த நிலை என்றால் அடித்தட்டு மக்களை அதிகாரிகள் எப்படி கண்டுகொள்வார்கள்? என பல்வேறு தரப்பினும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ((மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு திமுக அரசு எப்போதும் துணை நிற்கும் என பெருமை பேசும் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை போகிறார்? என்பதே கேள்வியாக உள்ளது.