ஆளே இல்லாத இடத்தில் ஆய்வு செய்த அமைச்சர்! வேற யாருமில்ல அது நம்ம மினிஸ்டர் கயல்விழி செல்வராஜ் தான்!

ஆளே இல்லாத டீக்கடையில் டீ ஆற்றிய கதையாக, மாணவர்களே தங்காத ஆதிதிராவிடர் நல விடுதியை ஆய்வு செய்த விடிய திமுகவின் அமைச்சருக்கு, அதிகாரிகள் அல்வா கொடுத்த ருசிகர சம்பவம் குறித்து சொல்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை அருகே உள்ள மேல்மணம்பேடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியினை துறை அமைச்சர் கயல்விழி ஆய்வு மேற்கொண்டார். விடுதி கட்டடங்கள் புதிதாக பளீச்சென்று இருக்க, மாணவர்கள் தங்குகிறார்களா என்னும் குழப்பம் அமைச்சருக்கே வந்துள்ளது.

கழிவறைகளில் பெயிண்ட் டப்பாக்கள் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து வாளி வாங்கி வைக்கவில்லை என்று கேட்டதும் அங்கிருந்த திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி செல்வராணி மற்றும் மாணவர் விடுதி வார்டன் அர்ஜுனன் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தனர். ஏதேதோ சொல்லி சமாளித்தனர்.

விடுதி மாணவர்களுக்கான உணவுகள் குறித்து ஆய்வு செய்தபோது அங்கு உணவு பொருட்களும் குறைவாக இருந்ததால், அமைச்சர் விசாரிக்க அப்போதும் வார்டன் உள்ளிட்டோர் சால்ஜாப்பு செய்துள்ளனர்.

விடுதியில் 66 மாணவர்கள் தங்கி இருப்பதாக கணக்கு காட்டப்பட்டிருக்க, பட்டியலில் இருந்த மாணவர்களின் பெற்றோருக்கு போன் செய்து விசாரித்தபோதுதான் மாணவர்கள் விடுதிகளில் தங்கவில்லை என்பதே அமைச்சரின் கவனத்துக்கு தெரியவந்துள்ளது.

ஆளே இல்லாத டீக்கடையில் டீ ஆத்துவது போல மாணவர்களே இல்லாத விடுதியில், 66 மாணவர்களுக்கு உணவு தயாராக இருப்பதாக அமைச்சருக்கே வார்டனும் அதிகாரியும் அல்வா கொடுத்ததால், கோபமடைந்த அமைச்சர், அவர்களை கடிந்து கொண்டார். தொடர்ந்து அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதாகவும் கூறிச் சென்றார்.

விடியா ஆட்சியில் துறை அமைச்சருக்கு தெரியாமல் ஒரு விடுதியிலேயே இத்தனை கோல்மால்கள் என்றால் இன்னும் என்னென்ன தரமான சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ளதோ? இதெல்லாவற்றையும் அமைச்சர் கண்டுபிடிப்பாரா என்னும் கேள்வியும் எழுந்துள்ளது.

Exit mobile version