பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் அமைச்சர் காமராஜ் சந்திப்பு

பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதானைச் சந்தித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தமிழகத்துக்குக் கூடுதல் மண்ணெண்ணெய் வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய உணவுத் துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கத் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் டெல்லி சென்றுள்ளார். அங்குப் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை அவரது இல்லத்தில் அமைச்சர் காமராஜ் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்துக்குக் கூடுதல் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். ஏற்கெனவே வழங்கப்பட்ட மண்ணெண்ணெயில் 24 விழுக்காட்டை மத்திய அரசு குறைத்துள்ள நிலையில் அதையும் முழுமையாக வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் தமிழக அமைச்சர் காமராஜ் வலியுறுத்தினார்.

Exit mobile version