வடிவேலு பட பாணியில் குழம்பிய அமைச்சர், சென்னையில் உள்ள வார்டுகளின் எண்ணிக்கை 160 என உளறியதால் சிரிப்பலை பரவியது.
சென்னை தலைமை செயலகம் கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் உள்ளாட்சி தேர்தல் பணிகளின் நிலைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர் சென்னையில் உள்ள 160 வார்டுகள் என்று ஆரம்பித்த போது அருகில் இருந்த அதிகாரிகள் அதிர்ந்து போயினர், உடனடியாக அவரது வாக்கியத்தை அதிகாரிகள் திருத்தியதும் 200 வார்டுகள் என்று தெரிவித்தார். அதோடு சென்னையில் உள்ள மக்கள் தொகையே 80 லட்சமாக உள்ள நிலையில் அதிலும் தெளிவு இல்லாமல் 80 லட்சம் வாக்காளர்கள் கொண்ட சென்னை என்று அமைச்சர் சொன்னதும் அதிகாரிகள் செய்வதறியாது இருந்தனர்.
தற்போது அமைச்சராக இருக்கும் இவர் பலமுறை அமைச்சர் அரியணையை அலங்கரித்திருக்கும் நிலையில் தமிழகத்தின் முக்கிய மாவட்டமாக உள்ள சென்னையின் பூகோளம் கூட தெரியாமல் இருப்பது அனைவரிடத்திலும் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post