ப.சிதம்பரம் கைதுக்கு பிறகு மத்திய அரசுக்கு எதிராக மு.க.ஸ்டாலினின் விமர்சன கருத்துகள் குறைந்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 148-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை இராஜாஜி சாலையில் உள்ள வ.உ.சிதம்பரனாரின் திருவுருவ சிலைக்கு அலங்கரிக்கப்பட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த அவரின் உருவப் படத்திற்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ப.சிதம்பரத்தின் கைதுக்கு பின்னர் ஸ்டாலினின் விமர்சன கருத்துகள் குறைந்துள்ளதாக தெரிவித்தார். தானும் கைது செய்யப்படலாம் என்ற பயம் ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Discussion about this post