சென்னை கடற்கரைச் சாலையில் வீரமாமுனிவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த அமைச்சர் ஜெயக்குமார், பஞ்சமி நிலம் தொடர்பான விவகாரத்தில் ஸ்டாலினின் செயல்பாடுகள் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதைப் போல உள்ளதாகத் தெரிவித்தார்.
16ஆம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டிலிருந்து தமிழகத்திற்கு வந்த மதபோதகரும், தமிழ்மொழியை நன்கு கற்றுத்தேர்ந்து பல காவியங்கள் படைத்த அறிஞருமான கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற இயற்பெயருடைய, வீரமாமுனிவரின் பிறந்த நாள் இன்று அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. இதனையொட்டிச் சென்னை கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள வீரமாமுனிவரின் சிலைக்குக் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்குத் தமிழக அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பஞ்சமி நிலம் தொடர்பான விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் செயல்படுவதாகத் தெரிவித்தார்.
Discussion about this post