குளம் மேம்பாடு பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் ஆய்வு

திருச்சி குஜிலியான் குளத்தினை மேம்பாடு செய்யும் பணியை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் ஆய்வு செய்தார்.

திருச்சி, சேதுராப்பட்டி, குஜிலியான்குளம் குடிமராமத்து பணியையும், புதுக்கோட்டை மாவட்டம் மதயானைபட்டி நீர் உந்து நிலையம் ஆகியவற்றையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் ஆய்வு செய்தார். திருச்சி மாவட்டத்தில் ஆயிரத்து 130 சிறுபாசன ஏரிகளும், ஆயிரத்து 799 குளங்கள் மற்றும் ஊரணிகள் உள்ளன. இதில் 2019 – 2020 ஆம் ஆண்டிற்கு 575 சிறுபாசன ஏரிகளும், 481 குளம் மற்றும் ஊரணிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றை அமைச்சர் வேலுமணி பார்வையிட்டார். மதயானைபட்டியில் உள்ள நீருந்து நிலையத்தின் 2 தரை மட்ட நீர் தேக்கத் தொட்டிகளின் செயல்பாடுகளையும் அவர் ஆய்வு செய்தார்.

இதனிடையே, திருச்சியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் 2 மாநகராட்சிகள், 19 நகராட்சிகள், 73 பேரூராட்சிகள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

Exit mobile version