மானியக் கோரிக்கை மீதான பதிலுரையின் போது, சட்டத்துறையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை அமைச்சர் சி.வி.சண்முகம் வெளியிட்டுள்ளார்.
அரசு சட்டக் கல்லூரிகளில் வைஃபை மண்டலம் மூலம் அதிவேக இணைய வசதி 30 லட்சம் நிறுவப்படும், திருப்பூரில் ஒரு கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் 59 லட்சம் செலவில் அமைக்கப்படும், திருச்சி மாவட்டம் முசிறியில் 21 லட்சம் செலவில் மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்றம் அமைக்கப்படும், சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி, விழுப்புரம், தருமபுரி அரசு சட்டக்கல்லூரிகளில் முதுகலை சட்டப்படிப்புகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்தார்.
கள்ளக்குறிச்சியில் ஒரு கூடுதல் சார்பு நீதிமன்றம் 91 லட்சம் செலவில் அமைக்கப்படும், ஆரணியில் கூடுதல் மாவட்ட நீதிபதிகள் குடியிருப்புகள் 98 லட்சம் செல்வில் கட்டப்படும், நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் ஒன்றரை கோடி செலவில் சார்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் மற்றும் குமாரபாளையத்தில் இரண்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஒரு கோடியே 83 லட்சம் செலவில் அமைக்கப்படும், 5 புதிய மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் மூன்றரை கோடி செலவில் அமைக்கப்படும் போன்ற பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் சி.வி.சண்முகம் வெளியிட்டார்.
மதுரை மற்றும் கோவை பெண்கள் தனிச்சிறைகளில் உதவி மருத்துவ அலுவலர் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்படும், புழல் மத்திய சிறை வளாகத்தில் நிர்வாக அலுவலகம் 62 லட்சம் செலவில் கட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்புகள் ஏதுவும் இல்லாமல் பதிலுரை வழங்கிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை, முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் பாராட்டினர். இதேபோல், திமுக உறுப்பினர்களும் சட்டத்துறை அமைச்சருக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தனர்.
Discussion about this post