விக்கிரவாண்டியில் சமூக நலத் துறை சார்பில் 2 ஆயிரத்து 375 பெண் பயனாளிகளுக்கு 7 கோடியே 82 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ஏழை எளிய பெண்கள் கல்வி வளர்ச்சி பெறுவதற்காக அதிமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருவதாக கூறினார்.
கடந்த ஆண்டு மட்டும், 56 ஆயிரத்து 137 பெண் பயனாளிகளுக்கு, 212 கோடி ரூபாய் மதிப்பில் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். விழாவில் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு முடித்த ஏழை எளிய பெண்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் வீதம் 4 கிராம் தங்க நாணயமும், பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த ஏழை எளிய பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம், நான்கு கிராம் தங்க நாணயமும், திருமண உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது. அதன்படி, சமூக நலத்துறை சார்பில் 2 ஆயிரத்து 375 பெண் பயனாளிகளுக்கு 7 கோடியே 82 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.
Discussion about this post