விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 2 ஆயிரத்து 81 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, ஆரணி நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Discussion about this post