சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் தனியார் பள்ளி வாகனங்களை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.
பள்ளி வாகனங்களின் பராமரிப்பு, பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் ஆராயப்பட்டன. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகம் முழுவதும் 32 ஆயிரத்து 576 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், குறைபாடுகள் கண்டறியப்பட்ட 1,009 வாகனங்கள் அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இலவசப் பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும் வரை, பள்ளி மாணவர்கள் சீருடையில் இருந்தாலே அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று தெரிவித்த அமைச்சர், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
Discussion about this post