பொறியியல் படிப்பு கலந்தாய்விற்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில், பொறியியல் படிப்பதற்காக இந்த வருடம் 1 லட்சத்து 27ஆயிரத்து 145 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 406 பேர் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் கடந்த ஜூன் 3 ஆம் தேதி பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1 லட்சத்து 3 ஆயிரத்து 150 மாணவர்கள் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இதில் அரவிந்த் என்ற மாணவன் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 25 ஆம் தேதியும் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3 ஆம் தேதியும் தொடங்குகின்றன.