முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, 'கௌரவ டாக்டர் பட்டம்'

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, கெளரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளதாக டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் 28-வது பட்டமளிப்பு விழா, வரும் 20 ஆம் தேதி நடைபெறுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விழாவில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவிக்கிறார். இந்த நிகழ்வின் போது, பல்கலைக்கழகம் சார்பில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

Exit mobile version