தனக்காக மட்டுமே வாழ்பவரை இந்த உலகம் எளிதில் மறந்து விடும். ஆனால் மக்களுக்காகவே வாழ்ந்தவரை யாராலும் மறக்கமுடியாது. அப்படிப்பட்ட அரசியலின் முடிவு பெறாத சகாப்தமும், சினிமாவின் மாபெரும் நட்சத்திரமும், மக்களின் நாயகனுமான புரட்சித் தலைவர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு குறித்த தொகுப்பை தற்போது பார்க்கலாம்…..
வார்த்தைகளில் அடக்க முடியாத மாபெரும் வீர வரலாறு இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி பிறந்தார். அவர் தான் எம்.ஜி.ஆர் எனும் சகாப்தம்.
எம்.ஜி.ஆருக்கு இரண்டரை வயதான போது தந்தை இறந்து விட குடும்பம் வறுமையில் சிக்கிக் கொள்ள, வறுமையை தாங்க முடியாத தாய் சத்யபாமா, மகன்கள் சக்கரபாணி மற்றும் எம்.ஜி.ஆருடன் இலங்கையிலிருந்து வெளியேறி கேரளா வந்து, அதன்பின் கும்பகோணத்தில் வாழ்ந்து வந்தார்.
நாடகத்துறையில் நன்கு அனுபவத்தை பெற்ற பிறகு திரைத்துறைக்கு சென்ற எம்.ஜி.ஆர் 1936ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தார்.
இருப்பினும் 1947ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்து வெளிவந்த ராஜகுமாரி படத்திற்கு பிறகு அடுத்தடுத்த படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றியைத் தந்தன.
1953ஆம் ஆண்டு அரசியல் கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தில் சேர்ந்து தீவிரமாக பணியாற்றி வந்தார் எம்.ஜி.ஆர்.
1956ல் திரையுலகில் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் எம்.ஜி.ஆர் உருவெடுத்தார்.
1962ஆம் ஆண்டு மாநில சட்ட மேலவை உறுப்பினரானார். இதனைதொடர்ந்து 1967ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார்.
அதே ஆண்டான 1967ல் ஜனவரி மாதம் 12ஆம் தேதி சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டார்.
இச்சம்பவத்திற்குப் பின்னர் முதன் முதலாக அதே செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி 1967ஆம் ஆண்டு ரிலீஸான காவல்காரன் படம் மீண்டும் அவரது ஆளுமையை வெளிக் காண்பித்தது.
இதனைதொடர்ந்து 1969ஆம் ஆண்டு திமுக பொருளாளராக மாறியும் தீவிரமாக மக்களுக்கு தொண்டாற்றி வந்தார்.
ஆனால், அண்ணாதுரையின் மறைவுக்கு பின்னர் கருணாநிதியின் சதி அறிந்து 1972ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் விலகினார்.
இதனையடுத்து 1972இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவரின் தொண்டர் ஆரம்பிக்க, தலைவராகவும், பொதுச்செயலாளாராகவும் பொறுப்பு ஏற்றார். பின்பு அக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழமாக மாறியது.
அதே ஆண்டான 1972இல் ஆண்டு ரிக்ஷாக்காரன் படத்தில் நடித்ததால், அவரின் நடிப்பு திறமையை பாராட்டி தேசிய விருது வழங்கப்பட்டது.
அதிமுக முதன் முதலாகப் போட்டியிட்ட திண்டுக்கல் தொகுதியில் பெரும் வெற்றி பெற்றது. திரைப்படங்களின் மூலம் எம்.ஜி.ஆர். அடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும் மக்களின் ஆதரவைப் பெற உதவின.
இதனையடுத்து 1974ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி அதிமுகவின் சார்பாக புதுச்சேரியில் போட்டியிட்ட சுப்ரமணியன் ராமசாமி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்.
இதேப்போன்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., 1977ல் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று முதன் முறையாக தமிழ் நாட்டின் முதலமைச்சரானார்.
1984 தேர்தலில், தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரசாரத்திற்கே வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வரானார்.
1977 முதல் 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியில் இருந்தவர் எம்ஜிஆர்.
முதலமைச்சராக பதவியில் இருந்தபோதே டிசம்பர் 24ஆம் தேதி, 1987ல் எம்ஜிஆர் மண்ணுலகை விட்டு மறைந்தாலும் இன்றும் தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்..
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின் 1988-ம் ஆண்டு பாரத ரத்னா விருதை வழங்கி அரசு கெளரவித்தது.
பயங்கர சூறாவளியால் வேரோடு சாய்ந்த ஆலமரம் தன்னுடைய விதைகளை இவ்வுலகில் விட்டுச் சென்று மீண்டும் விருட்சமாய் வளர்வது போல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் அரசியல் வரலாறு என்றென்றும் மக்களுக்காக தொடரும்…..
Discussion about this post