எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் போன்று வேடமணிந்து அதிமுகவினர் பிரசாரம்

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் உள்ளிட்டவர்கள் போன்று வேடமணிந்து அதிமுகவினர் பிரசாரம் செய்தனர். இது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் முனியாண்டி போட்டியிடுகிறார்.அவருக்கு ஆதரவாக அமைச்சர்கள் உட்பட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்தநிலையில், எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் போன்று வேடமணிந்து வந்தவர்கள் அதிமுக அரசின் சாதனைகளை பிரசாரம் மூலம் எடுத்துரைத்தனர். இதனால் பொதுமக்கள், தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.

Exit mobile version