கடலூர் மாவட்டம் புவனகிரியில் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் ஒருவர் கடந்த 32 ஆண்டுகளாக அவரின் நினைவு நாளன்று உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
கடலூர் மாவட்டம் புவனகிரியில் வசித்து வரும் சேட்டு என்கிற பழனியாண்டி என்பவர், தனது 13 வயதிலிருந்தே எம்.ஜி.ஆரின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளார். அதனால் அவர் நகர எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர், மட்டுமின்றி மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 32 ஆண்டுகளாக எம்ஜிஆர் நினைவு நாள் அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அந்த வகையில் இந்த வருடமும், புவனகிரி எம்.ஜி.ஆர் சாலையில் உள்ள சிலைக்கு அருகில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.